http://www.yarl.com/forum3/index.php?showtopic=78032
ஈழத்தமிழர்களின் வரலாற்றை சொல்லும் படம் ''வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி'' -ஆவணப்படம் வெளியிடப்பட்டது
தமிழர் பாதுகாப்பு காட்சி ஊடகம் (Save Tamils Visual Media) தயாரித்து, சோமீதரன் இயக்கிய “வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் 20 ஆம் திகதி சென்னையில் வெளியிடப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம் ஈழத்தின் , தமிழ் ஈழரின் வரலாற்றைப் பேசுவதில் இருந்து துவங்கி மே மாதம் 2009 ஒரு இனப்படுகொலையின் மூலம் அம்மக்கள் முள்வேலி முகாமுக்குள் அடைக்கபட்டது வரை அரசியல் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டு இறுதியில் அம்மக்கள் தமக்கான ஒரு நாடு தம் தாய் நிலத்தில் கிடைக்கும் என்ற வேட்கையுடன் நடைபோடுகின்றனர் என்று முடிகிறது. முதன்மையான அரசியல் நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் என ஒவ்வொன்றையும் தரவுகளோடு முன்வைக்கிறது இந்த ஆவணப்படம்.சென்னை கோடம்பாக்கம் எம். எம். திரையரங்கில் நடந்த இந்த ஆவணப் படம் வெளியீட்டு விழாவில் தமிழின உணர்வாளர்கள், தகவல் தொழில் நுட்பத் துறையினர்கள், ஊடகவியலாளர்கள், உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள் என இருநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.நிகழிவில் பேசிய ஒரிய மக்கள் – தமிழ் மக்களிடையே உள்ள வரலாற்று தொடர்புகளை பற்றிய ஆய்வுகளை நெடு நாட்களாக செய்து வரும் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள், அசோக பேரரசு அக்கால இலங்கைகு வந்து பெளத்த்த்தை பரப்பியதையும், அதற்கு முன் அங்கிருந்த மக்கள் தமிழ் பேசும் மக்கள் என்பதையும். அந்த நிலம் தமிழர் நிலம் என்றும் கூறினார்.ஆவணப்பட தேவையையும் அது வரலாற்றை எப்படி அடுத்த தலைமுறையிடம் எடுத்து செல்ல உதவும் என்பதை ஆவணப்பட இயக்குனர்களான திரு. அமுதன் மற்றும் திரு. சீனிவாசன் அவர்களும் கூறினார்கள்.மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நட்த்திய போராட்ட்த்தில் தாமிரபரணி ஆற்றில் தொழிலாளர்கள் மூழ்கிய உயிரிழந்த நிகழ்வை ஆவணப்படமாக்கிய திரு. சீனிவாசன் அவர்கள் பேசும் பொழுது, சீனா தன்னுடைய 23 மாகாணங்களில் 24 ஆக இலங்கையும் சேர்த்துக் கொண்டுவிட்டது என்று இலங்கையில் ஏற்ப்பட்டுள்ள சீன ஆதிக்கத்தையும் அதனால் தமிழர்களுக்கு ஏற்பட போகும் ஆபத்து பற்றியும் கூறிப்பிட்டு பேசினார்.அரசுகள் தொழில்நுட்பங்கள், இராணுவபலம், பொருளாதார பல்ம் என்று எத்தனையோ வகையில் மக்கள் மீது அடக்குமுறையைச் செய்தாலும், ஒடுக்கப்படும் மக்கள் என்றுமே அரசை எதிர்த்துத்தான் வந்திருக்கிறார்கள். “உலகின் மக்கள் போராட்டங்கள் பின்னடைவை எதிர்நோக்கினாலும், காலம் தமது போராட்டங்களால் அவர்கள் விடுதலையை வென்று எடுத்திருக்கிறார்கள் என்பதைத்தான் கடந்த கால வரலாறு நமக்கு சொல்கின்றது என்பதை இன்றைய இலத்தின் அமெரிக்கா நாடுகளை எடுத்துக்காட்டி ஈழப் போராட்டத்தின் எதிர்காலத்தைப் பற்றி தோழர் தியாகு உரையாற்றினார்.இயக்குனர் சோமிதரன் பேசும் பொழுது, தமிழ் ஈழரின் வரலாற்றைத் தொகுத்துள்ள இந்த படம் தமிழ் ஈழரின் வரலாற்றை அறிய முற்படும் முன் முயற்சியே. தமிழர்கள் தங்கள் வரலாற்றை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் அதற்கு இதைப் போன்ற ஆவணப்படங்கள் நிறைய எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.“இன்றைய இளைஞர்கள் எத்தகையப் போராட்டத்தை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். தமிழர்கள் அமைதிவழியில் போராடிக்கொண்டிருந்த பொழுது அதனை சிங்களாவர்கள் ஆயுதம் கொண்டு தான் அடக்க முயன்றனர். அவர்களின் அடக்குமுறையே தமிழர்களை அமைதிவழியில் இருந்து காலப்போக்கில் ஆயுதவழிக்கு தள்ளியது. இந்த ஆவணப்படம் போன்ற சமூக அக்கறை உள்ள படைப்புகள் மேலும் வெளிவர வேண்டும்” என்று தன் பேச்சில் இயக்குனர் மணிவண்ணன் குறிப்பிட்டார்.சேவ் தமிழ் இயக்கத்தின் சார்பாக உரையாற்றிய தோழர் செந்தில், இந்த படம் முழுக்க முழுக்க அங்கு போராடிய மக்களையும் , அவர்தம் அரசியல் வரலாற்றையும் காட்சிப்படுத்தும் முயற்சியே. இந்த ஈழ வரலாற்று ஆவணப்படத்தை ஒரு மூலமாக வைத்து, ஒவ்வொரு காலகட்டம் குறித்தும் விரிவாக ஆய்வுப்பூர்வமாக காட்சி ஊடகத்தில் ஆவணப்படுத்த வேண்டும்” என்றார்.தமிழர் பாதுகாப்பு காட்சி ஊடகம் (Save Tamils Visual Media) தயாரித்து, சோமீதரன் இயக்கிய “வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் 20 ஆம் திகதி சென்னையில் வெளியிடப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம் ஈழத்தின் , தமிழ் ஈழரின் வரலாற்றைப் பேசுவதில் இருந்து துவங்கி மே மாதம் 2009 ஒரு இனப்படுகொலையின் மூலம் அம்மக்கள் முள்வேலி முகாமுக்குள் அடைக்கபட்டது வரை அரசியல் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டு இறுதியில் அம்மக்கள் தமக்கான ஒரு நாடு தம் தாய் நிலத்தில் கிடைக்கும் என்ற வேட்கையுடன் நடைபோடுகின்றனர் என்று முடிகிறது. முதன்மையான அரசியல் நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் என ஒவ்வொன்றையும் தரவுகளோடு முன்வைக்கிறது இந்த ஆவணப்படம்.
சென்னை கோடம்பாக்கம் எம். எம். திரையரங்கில் நடந்த இந்த ஆவணப் படம் வெளியீட்டு விழாவில் தமிழின உணர்வாளர்கள், தகவல் தொழில் நுட்பத் துறையினர்கள், ஊடகவியலாளர்கள், உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள் என இருநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
நிகழிவில் பேசிய ஒரிய மக்கள் – தமிழ் மக்களிடையே உள்ள வரலாற்று தொடர்புகளை பற்றிய ஆய்வுகளை நெடு நாட்களாக செய்து வரும் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள், அசோக பேரரசு அக்கால இலங்கைகு வந்து பெளத்த்த்தை பரப்பியதையும், அதற்கு முன் அங்கிருந்த மக்கள் தமிழ் பேசும் மக்கள் என்பதையும். அந்த நிலம் தமிழர் நிலம் என்றும் கூறினார்.
ஆவணப்பட தேவையையும் அது வரலாற்றை எப்படி அடுத்த தலைமுறையிடம் எடுத்து செல்ல உதவும் என்பதை ஆவணப்பட இயக்குனர்களான திரு. அமுதன் மற்றும் திரு. சீனிவாசன் அவர்களும் கூறினார்கள்.மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நட்த்திய போராட்ட்த்தில் தாமிரபரணி ஆற்றில் தொழிலாளர்கள் மூழ்கிய உயிரிழந்த நிகழ்வை ஆவணப்படமாக்கிய திரு. சீனிவாசன் அவர்கள் பேசும் பொழுது, சீனா தன்னுடைய 23 மாகாணங்களில் 24 ஆக இலங்கையும் சேர்த்துக் கொண்டுவிட்டது என்று இலங்கையில் ஏற்ப்பட்டுள்ள சீன ஆதிக்கத்தையும் அதனால் தமிழர்களுக்கு ஏற்பட போகும் ஆபத்து பற்றியும் கூறிப்பிட்டு பேசினார்.
அரசுகள் தொழில்நுட்பங்கள், இராணுவபலம், பொருளாதார பல்ம் என்று எத்தனையோ வகையில் மக்கள் மீது அடக்குமுறையைச் செய்தாலும், ஒடுக்கப்படும் மக்கள் என்றுமே அரசை எதிர்த்துத்தான் வந்திருக்கிறார்கள். “உலகின் மக்கள் போராட்டங்கள் பின்னடைவை எதிர்நோக்கினாலும், காலம் தமது போராட்டங்களால் அவர்கள் விடுதலையை வென்று எடுத்திருக்கிறார்கள் என்பதைத்தான் கடந்த கால வரலாறு நமக்கு சொல்கின்றது என்பதை இன்றைய இலத்தின் அமெரிக்கா நாடுகளை எடுத்துக்காட்டி ஈழப் போராட்டத்தின் எதிர்காலத்தைப் பற்றி தோழர் தியாகு உரையாற்றினார்.
இயக்குனர் சோமிதரன் பேசும் பொழுது, தமிழ் ஈழரின் வரலாற்றைத் தொகுத்துள்ள இந்த படம் தமிழ் ஈழரின் வரலாற்றை அறிய முற்படும் முன் முயற்சியே. தமிழர்கள் தங்கள் வரலாற்றை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் அதற்கு இதைப் போன்ற ஆவணப்படங்கள் நிறைய எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
“இன்றைய இளைஞர்கள் எத்தகையப் போராட்டத்தை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். தமிழர்கள் அமைதிவழியில் போராடிக்கொண்டிருந்த பொழுது அதனை சிங்களாவர்கள் ஆயுதம் கொண்டு தான் அடக்க முயன்றனர். அவர்களின் அடக்குமுறையே தமிழர்களை அமைதிவழியில் இருந்து காலப்போக்கில் ஆயுதவழிக்கு தள்ளியது. இந்த ஆவணப்படம் போன்ற சமூக அக்கறை உள்ள படைப்புகள் மேலும் வெளிவர வேண்டும்” என்று தன் பேச்சில் இயக்குனர் மணிவண்ணன் குறிப்பிட்டார்.
சேவ் தமிழ் இயக்கத்தின் சார்பாக உரையாற்றிய தோழர் செந்தில், இந்த படம் முழுக்க முழுக்க அங்கு போராடிய மக்களையும் , அவர்தம் அரசியல் வரலாற்றையும் காட்சிப்படுத்தும் முயற்சியே. இந்த ஈழ வரலாற்று ஆவணப்படத்தை ஒரு மூலமாக வைத்து, ஒவ்வொரு காலகட்டம் குறித்தும் விரிவாக ஆய்வுப்பூர்வமாக காட்சி ஊடகத்தில் ஆவணப்படுத்த வேண்டும்” என்றார்.
நன்றி:மீனகம்
Monday, 29 November 2010
Monday, 22 November 2010
Friday, 19 November 2010
Subscribe to:
Posts (Atom)