Wednesday, 23 May 2012
Saturday, 19 May 2012
தமிழீழ அரசாங்கத்தின் நாதம் வானோசை இலங்கை வான் பரப்பில் ஒலித்தது
தமிழீழ அரசாங்கத்தின் நாதம் வானோசை இலங்கை வான் பரப்பில் ஒலித்தது .
தமிழீழத் தாயகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறவுப்பாலம் தனது முதலாது ஒலிபரப்பினைத் தொடங்கியது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான இன்று இலங்கையின் வான்பரப்புக்குள் நாதம் வானோசை உள்நுழைந்தது.
இச்சேவையினைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்ச்சிகளை மேற்கொண்டிருந்த போதும் சீரான முறையில் நாதம் வானோசை ஒலித்தது.
இலங்கை நேரம் இரவு 8:30 மணிக்கு சிற்றலையூடாக அலைவரிசை (short-wave) 12 250 mhz ல் ஒலித்துள்ளது.
இந்த ஒலிபரப்பு தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட ஆசிய பிராந்தியத்தில் இதனைக் கேட்ககூடியதாக இருந்தது.
தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசையின் சனநாயகப் போராட்ட வடிவமாகவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாகவும் உலகத் தமிழர்களின் ஈழத்துக்கான குரலை காவிவரும் உணர்வுப்பாலமாகவும் ,வ்வானலை ஒலிபரப்பு அமையவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Friday, 16 March 2012
Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes சிறிலங்காவின் கொலைக்களங்கள்
சிறிலங்காவின் கொலைக்களங்கள்\" பாகம் - 2
மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட "சனல்4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களங்கள்" ஆவணப்படத்தின் இரண்டாவது பாகம் நேற்று அதிகாலை March 15 இலங்கை நேரப்படி 4.25 மணிக்கு ஒளிபரப்பாகியது. பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கான அலைவரிசையில் மட்டுமே அது ஒளிபரப்பானபோதும் நேற்றுப் பகல் இணையத் தளத்தில் அது வெளியிடப்பட்டது.
"சிறிலங்காவின் கொலைக்களங்கள் தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்" என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 50 நிமிடங்களை அது கொண்டிருக்கிறது. இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக வெளியிட்ட "சிறிலாங்காவின் கொலைக் களங்கள்" என்ற முதல் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள "சனல் 4", இந்த ஆவணப்படத்தில் போர்க் குற்றங்களுக்கான மேலும் ஆதாரங்களைத் தான் வெளியிடுவதாகக் குறிப்பிடுகிறது. மிகத் தெளிவான நான்கு சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை அரச படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் ஆராயப்பட்டுள்ளன. அதற்குப் பொறுப்பானவர்களையும் இந்தப் படம் இனங்காட்டி உள்ளது.
அப்போதைய இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று இந்த ஆவணப்படத்தின் மூலம் "சனல் 4" தொலைக்காட்சி நிறுவுகிறது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தினைச் சேர்ந்த சர்வதேசப் பணியாளர்கள் இருவரை உள்ளடக்கிய குழு உடையார்கட்டுப் பகுதியில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி தற்காலிக தங்கிடம் ஒன்றை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த சம்பவத்துடன் இந்த ஆவணப்படம் போர்க் குற்றங்களை ஆராயத் தொடங்குகிறது. இலங்கை அரசு கூறியது போன்று இல்லாமல் சூனியப் பிரதேசங்கள் அல்லது தாக்குதல் தவிர்ப்பு வலயங்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டனர் என்கிற முதலாவது போர்க் குற்றச்சாட்டை ஆவணப்படம் முன்வைக்கிறது.
போர் வலயத்துக்குள் அகப்பட்ட மக்களின் எண்ணிக்கையை வேண்டும் என்றே குறைத்துக் காட்டி, உண்மையான மக்கள் எண்ணிக்கைக்கு வேண்டிய உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அனுப்பி வைக்காமல் தடையை ஏற்படுத்தியமை அரசின் இரண்டாவது போர்க் குற்றம் என்றும் நிறுவப்படுகிறது.
அரசு உலக நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உறுதிய அளித்தது போன்று போரின் இறுதி நாள்களில் கனரக ஆயுதங்களின் பாவனையை நிறுத்தவில்லை என்றும் மோதல் தவிர்ப்பு வலயங்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் ஆதாரங்களுடன் நிறுவும் இந்த ஆவணப்படம் மூன்றாவது போர்க் குற்றச்சாட்டாக அதனை முன்வைக்கிறது.
நான்காவது போர்க் குற்றச்சாட்டு தேசியத் தலைவர் பிரபாகரனின் மூன்றாவது மகன் பாலச்சந்திரன் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டமையை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறது. உடல் ரீதியாக பாலச்சந்திரன் சித்திரவதை செய்யப்படவில்லை என்றாலும் உளவியல் ரீதியாகக் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்று போராசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் குறித்து அரசு வெளியிட்ட காணொலிக் காட்சிகளில் காட்டப்படும் நபரும் போரில் கொல்லப்பட்டமைக்கான சான்றுகள் இல்லை என்றும் அருகில் இருந்து அதிகூடிய விசையுள்ள துப்பாக்கியால் சுட்டப்பட்டதாலேயே அந்த மனிதரின் தலையில் காணப்பட்ட காயம் ஏற்பட்டிருக்க முடியும் என்றும் சில செக்கன்களில் அடங்கும் காட்சிகளில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்குப் பின்னராவது இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்களுக்கு நீதி கிடைக்குமா என்று கேள்வி எழுப்புவதுடன் படம் நிறைவுபெறுகிறது.
Thanks to Uthayan ! Link
======================

Subscribe to:
Posts (Atom)