Wednesday 23 May 2012

தமிழீழ இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு ( 3rd Year May 2012 )

Saturday 19 May 2012

தமிழீழ அரசாங்கத்தின் நாதம் வானோசை இலங்கை வான் பரப்பில் ஒலித்தது




தமிழீழ அரசாங்கத்தின் நாதம் வானோசை இலங்கை வான் பரப்பில் ஒலித்தது .



தமிழீழத் தாயகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறவுப்பாலம் தனது முதலாது ஒலிபரப்பினைத் தொடங்கியது.




முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான இன்று இலங்கையின் வான்பரப்புக்குள் நாதம் வானோசை உள்நுழைந்தது.



 
 
இச்சேவையினைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்ச்சிகளை மேற்கொண்டிருந்த போதும் சீரான முறையில் நாதம் வானோசை ஒலித்தது.




இலங்கை நேரம் இரவு 8:30 மணிக்கு சிற்றலையூடாக அலைவரிசை (short-wave) 12 250 mhz ல் ஒலித்துள்ளது.

இந்த ஒலிபரப்பு தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட ஆசிய பிராந்தியத்தில் இதனைக் கேட்ககூடியதாக இருந்தது.



தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசையின் சனநாயகப் போராட்ட வடிவமாகவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாகவும் உலகத் தமிழர்களின் ஈழத்துக்கான குரலை காவிவரும் உணர்வுப்பாலமாகவும் ,வ்வானலை ஒலிபரப்பு அமையவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ இனப்படுகொலை

Details on MakkalOsai Epaper