Wednesday, 27 March 2013

தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம்


27MARCH2013 தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று 27MARCH2013 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். தீர்மானம் விபரம்: “தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எசமானனாக இல்லாமல் – உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை” என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்; இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கைவாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” முதல்வர் வேண்டுகோள்: இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் வகையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். 27-MARCH-2013 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`

Thursday, 7 March 2013

இலங்கை பிரச்சினை குறித்து யஷ்வந்த் சின்ஹா மக்களவையில் பேச்சு (பா.ஜ.க)


இலங்கை பிரச்சினை குறித்து யஷ்வந்த் சின்ஹா மக்களவையில் பேச்சு (பா.ஜ.க)