Friday, 16 March 2012

Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes சிறிலங்காவின் கொலைக்களங்கள்

சிறிலங்காவின் கொலைக்களங்கள்\" பாகம் - 2



மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட "சனல்4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களங்கள்" ஆவணப்படத்தின் இரண்டாவது பாகம் நேற்று அதிகாலை March 15 இலங்கை நேரப்படி 4.25 மணிக்கு ஒளிபரப்பாகியது. பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கான அலைவரிசையில் மட்டுமே அது ஒளிபரப்பானபோதும் நேற்றுப் பகல் இணையத் தளத்தில் அது வெளியிடப்பட்டது.


"சிறிலங்காவின் கொலைக்களங்கள் தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்" என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 50 நிமிடங்களை அது கொண்டிருக்கிறது. இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக வெளியிட்ட "சிறிலாங்காவின் கொலைக் களங்கள்" என்ற முதல் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள "சனல் 4", இந்த ஆவணப்படத்தில் போர்க் குற்றங்களுக்கான மேலும் ஆதாரங்களைத் தான் வெளியிடுவதாகக் குறிப்பிடுகிறது. மிகத் தெளிவான நான்கு சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை அரச படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் ஆராயப்பட்டுள்ளன. அதற்குப் பொறுப்பானவர்களையும் இந்தப் படம் இனங்காட்டி உள்ளது.





அப்போதைய இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று இந்த ஆவணப்படத்தின் மூலம் "சனல் 4" தொலைக்காட்சி நிறுவுகிறது.



அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தினைச் சேர்ந்த சர்வதேசப் பணியாளர்கள் இருவரை உள்ளடக்கிய குழு உடையார்கட்டுப் பகுதியில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி தற்காலிக தங்கிடம் ஒன்றை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த சம்பவத்துடன் இந்த ஆவணப்படம் போர்க் குற்றங்களை ஆராயத் தொடங்குகிறது. இலங்கை அரசு கூறியது போன்று இல்லாமல் சூனியப் பிரதேசங்கள் அல்லது தாக்குதல் தவிர்ப்பு வலயங்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டனர் என்கிற முதலாவது போர்க் குற்றச்சாட்டை ஆவணப்படம் முன்வைக்கிறது.


போர் வலயத்துக்குள் அகப்பட்ட மக்களின் எண்ணிக்கையை வேண்டும் என்றே குறைத்துக் காட்டி, உண்மையான மக்கள் எண்ணிக்கைக்கு வேண்டிய உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அனுப்பி வைக்காமல் தடையை ஏற்படுத்தியமை அரசின் இரண்டாவது போர்க் குற்றம் என்றும் நிறுவப்படுகிறது.

அரசு உலக நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உறுதிய அளித்தது போன்று போரின் இறுதி நாள்களில் கனரக ஆயுதங்களின் பாவனையை நிறுத்தவில்லை என்றும் மோதல் தவிர்ப்பு வலயங்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் ஆதாரங்களுடன் நிறுவும் இந்த ஆவணப்படம் மூன்றாவது போர்க் குற்றச்சாட்டாக அதனை முன்வைக்கிறது.


நான்காவது போர்க் குற்றச்சாட்டு தேசியத் தலைவர் பிரபாகரனின் மூன்றாவது மகன் பாலச்சந்திரன் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டமையை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறது. உடல் ரீதியாக பாலச்சந்திரன் சித்திரவதை செய்யப்படவில்லை என்றாலும் உளவியல் ரீதியாகக் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்று போராசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.


தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் குறித்து அரசு வெளியிட்ட காணொலிக் காட்சிகளில் காட்டப்படும் நபரும் போரில் கொல்லப்பட்டமைக்கான சான்றுகள் இல்லை என்றும் அருகில் இருந்து அதிகூடிய விசையுள்ள துப்பாக்கியால் சுட்டப்பட்டதாலேயே அந்த மனிதரின் தலையில் காணப்பட்ட காயம் ஏற்பட்டிருக்க முடியும் என்றும் சில செக்கன்களில் அடங்கும் காட்சிகளில் கூறப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்குப் பின்னராவது இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்களுக்கு நீதி கிடைக்குமா என்று கேள்வி எழுப்புவதுடன் படம் நிறைவுபெறுகிறது.



Thanks to Uthayan ! Link


======================

Monday, 5 December 2011

இனப்படுகொலை! வைகோ வெளியிட்ட காணொளி

----------------


இருதயம் பலவீனம் கொண்டோர் , சிறு பிள்ளைகள், முதியோர் , கர்ப்பிணி பெண்கள் - இந்த காணோளியை தயவு செய்து பார்க்க வேண்டாம் !

------------





இனப்படுகொலை! வைகோ வெளியிட்ட காணொளி


சிங்கள இனவாத அரசின் தமிழின படுகொலை:
அய்.நா.வின் மூவர் குழு அறிக்கை!
வைகோ விளக்கம்

----------------------------------------------------------------

Monday, 28 November 2011

வீரம் vs துரோகம்

Saturday, 12 November 2011

இலங்கையில் சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவே காரணம் !

இலங்கையில் சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவே காரணம் !

நோர்வே அறிக்கை


---------------




சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கும், தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு தொடுத்த இனப் படுகொலைப் போருக்கு இந்தியாவின் மெளன சம்மதமே காரணமென்றும் நார்வே அரசு அமைத்த குழு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.


சர்வதேச ஆதரவுடன் இலங்கையில் அமைதி ஏற்படுத்த நார்வே அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது ஏன் என்பது பற்றி ஆராய நார்வே அரசு அமைத்த குழு தனது அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, ‘அமைதியின் பகடைகள்‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2003-2004 ஆண்டுகளில் சமாதான முயற்சிகள் மெதுவாக அவிழத் தொடங்கிய போது கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களை இந்தியா அனுதாபத்துடன் அணுகியதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.

ஆனால் 2004இல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களின் அபிலாசைகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டாலும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினது இராணுவத் தீர்வு முயற்சிக்கு எதிராக எந்தவொரு அழுத்தமும் இந்தியா கொடுக்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனிப்பட்ட சந்திப்புகளில் நோர்வேயை “புலிகளின் நண்பர்“ என்று இந்தியா விமர்சித்ததாகவும், “புலிகளை அவர்களின் இடத்தில் வைக்க வேண்டும்“ என்று கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா படைகளுக்கு இந்தியா ரேடர்கள், புலனாய்வுத் தகவல்களை வழங்கியது. சிறிலங்காவுக்கு தாக்குதல் போர்த்தளபாடங்களை வழங்குவதில்லை என்ற கொள்கையை புதுடெல்லி கடைப்பிடித்தாலும், வேறு எவரிடம் இருந்தும் ஆயுதங்களை சிறிலங்கா கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் மீதான இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு, சிறிலங்காவுக்கு போரை நடத்துவதற்கு உந்துதலாக அமைந்தது.

2004இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, விடுதலைப் புலிகளால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட ராஜிவ்காந்தியின் துணைவியார் சோனியாகாந்தி, இந்தியாவின் சக்திவாய்ந்த நபராக மாறியது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


2008 இறுதியில் பொதுமக்களின் இழப்புகளை மட்டுப்படுத்துமாறு புதுடெல்லி கோரிய போதிலும் கூட, இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதற்கும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் ஆதரவு வழங்குவதில் இந்திய அரசாங்கம் மிகவும் தெளிவாக இருந்தது.

விடுதலைப் புலிகளின் இறுதி நாட்கள் பற்றி குறிப்பிடும் இந்த அறிக்கையில், புலிகள் மிக நெருக்கமாக சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு கொழும்பு மிகக் குறைந்தளவு ஆர்வமே காட்டியது. போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் தப்பித்துக் கொள்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டியிருக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

சமாதான முயற்சிகளில் இந்தியா கூடுதல் பங்கு வகிக்குமாறு 2007இல் நோர்வே தொடர்ச்சியாக வலியுறுத்திய போதும் புதுடெல்லி அதை நிராகரித்து விட்டது. இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த போது தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதும் தெளிவாகியது.

போரின் இறுதிக்கட்டத்தில் இந்தியாவில் நடந்த பொதுத்தேர்தல் குறித்து சிறிலங்கா கவலை கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தூக்கியெறியப்பட்டு வேறு யாரும் பதவிக்கு வந்தால் புலிகளுக்கு உதவி கிடைக்கலாம் என்ற கவலை சிறிலங்காவுக்கு இருந்ததாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு, முன்வரைவு அறிக்கையை ஏற்று ஆயுதங்களை கீழே போட இணங்குமாறு ஆலோசனை கூறியதாகவும், ஆனால் இந்த நகர்வு புலிகள் ஆதரவு அரசியல்வாதியான வைகோவுக்கு கசிந்ததும், இது காங்கிரசின் தந்திரம் என்று நிராகரிக்குமாறும், தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் புலிகளை மீட்கும் என்றும் அவர் உறுதி கூறியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நார்வே அரசின் அதிகாரப்பூர்வ ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையில் தமிழர் அழித்தொழிக்கப்பட்டதில் இந்திய அரசு வகித்த பங்கு ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


------------


Thanks Webdunia news

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1111/12/1111112032_1.htm

-----------------

Friday, 28 October 2011

Tamil - 7aam Arivu - Innum Enna Thozha - Tamil Eelam song

7aam Arivu - Innum Enna Thozha - Tamil Eelam song
----------------------------------------------------

Tamil Song







Telugu - 7th Sense - Endukanta Joda - Tamil Eelam Song
-----------------------------------------------------------




---

Sunday, 23 October 2011

LTTE not a Terror Org - Dutch Court

Dutch Court ( Netherlands )

Monday, 1 August 2011

srilanka Genocide Economic Sanctions -Discussion Pazha Karuppaiah

ஜெயா டிவி - நேர்முகம் நிகழ்ச்சி

" இலங்கை மீது பொருளாதார தடை " - தமிழ்நாடு அரசு தீர்மானம்

31 ஜூலை 2011

திரு ரபி பெர்னாட் மற்றும் திரு பழ.கருப்பையா MLA கலந்துரையாடல்

நன்றி - ஜெயா டிவி

பகுதி Part 1
-----------



-----------




பகுதி 2
---------
Part 2